PMK Ramalingam | NIA Logo (Photo Credit: @factmailnews / @Kanmani_Gunas X)

ஆகஸ்ட் 01, திருச்சி (Trichy News): தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், திருபுவனம் பகுதியில் வசித்து வந்த பாமக நிர்வாகி ராமலிங்கம், கடந்த 2019 பிப்ரவரி மாதம் 05ம் தேதி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த விசாரணையில், ராமலிங்கம் தான் வசித்து வரும் பகுதியில் நடைபெற்ற மதமாற்றத்தை எதிர்த்ததால் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. 4 Fishermen's Missing: இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்; நடுக்கடலில் 4 மீனவர்கள் மாயம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.! 

12 பேர் கைது., 6 பேருக்கு வலைவீச்சு:

இதனையடுத்து விசாரணையை திருவிடைமருதூர் காவல்துறையினரிடம் இருந்து கையில் எடுத்த என்ஐஏ முகமது ரியாஸ், நிஜாம் அலி, சர்புதீன், முகமத் ரிஷிவான், அசாருதீன் ஆகிய 5 பேரை கைது செய்தது. எள்ளலும், 18 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. என்.ஐ.ஏ விசாரணைக்கு பின்னர் 12 பேர் மொத்தமாக கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய 6 பேர் இன்னும் தலைமறைவாக இருக்கின்றனர்.

எச்.டி.பி.ஐ கட்சி நிர்வாகி வீட்டில் சோதனை:

இந்நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதலாக தஞ்சாவூர், திருச்சி உட்பட 10 மாவட்டங்களில், 25 இடங்களில் ராமலிங்கம் கொலை தொடர்பாக அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் முத்துப்பேட்டை, நன்னிலம், மயிலாடுதுறை தேரெழுந்தூர், திருச்சி துவாக்குடி, வாழவந்தான்கோட்டை ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடந்து வருகிறது. வாழவந்தான்கோட்டை பகுதியை சேர்ந்த எச்டிபிஐ கட்சி நிர்வாகி முகமது சித்திக் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.