![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/10/China-Theme-Park-Fire-Accident-Photo-Credit-Twitter-380x214.jpg)
அக்டோபர் 02, சீனா (Social Viral): சீனாவில் உள்ள வடக்கு பகுதியில் இருக்கும் ஷன்க்ஸி நகரில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஹேப்பி வேலி தீம் பார்க்கில் (Happy Valley Theme Park) பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டது.
சர்க்கஸ்களில் உருளை பந்துக்கு நடுவே இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் 2 வீரர்கள், சாகசம் செய்துகொண்டு இருந்தனர். அப்போது, ஒருவரின் வாகனம் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விபத்திற்குள்ளாகியது.
அடுத்த நொடியே வாகனம் தீப்பிடித்து எரிய, அதனை இயக்கியவரும் தீயின் பிடியில் சிக்கிக்கொண்டார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன பார்வையாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கினர். World Best Whiskey Awards 2023: உலகளவில் மிகச்சிறந்த விஸ்கியாக தேர்வு செய்யப்பட்டது, இந்தியாவின் "இந்த்ரி" விஸ்கி..!
நல்வாய்ப்பாக சர்க்கஸ் பணியாளர்கள் உடனடியாக சுதாரித்து தீயணைப்பான் கொண்டு தீயை அணைத்தனர். 2 வாகனங்களில் ஒருவர் தீக்காயம் அடைந்த நிலையில், மற்றொருவர் வாகனத்திலேயே உருண்டையை சுற்றி வந்தார்.
இதனால் அவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதங்களில் வைரலாகி வருகின்றன.
A motorcycle stunt rider is set on fire in the "Globe of Death" in front of distraught families at a theme park in China. pic.twitter.com/koQHxXCnUt
— HighImpactFlix (@HighImpactFlix) September 28, 2023