PM Modi Statue Kissed (Photo Credit: @Sheikhimran_ X)

டிசம்பர் 21, ஸ்ரீநகர் (Srinagar): காஷ்மீரில் பெர்ன் உடைகள் தினம் (Pheran day) ஆண்டுதோறும் கொண்டாடுவது ஒரு வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெர்ன் என்பது காஷ்மீரில் வசிப்பவர்கள் அணியக்கூடிய ஆடை ஆகும். இத்தினத்தை கொண்டாடுவதற்கு காஷ்மீரில் வசிக்கக்கூடிய அனைவரும் ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக் என்ற இடத்தில் கூடுவர். இந்த ஆண்டும் அந்த இடத்தில் கோலாகலமாக இந்த தினம் கொண்டாடப்பட்டது. அதுமட்டுமின்றி அங்கு பிரதமர் நரேந்திர மோடியின் சிலை போன்று அட்டையில் வைத்திருந்தனர். அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் அதனுடன் புகைப்படம் எடுத்து சென்றனர். அப்போதுதான் அங்கிருந்த ஒரு நபர் உற்சாகத்துடன் பிரதமர் நரேந்திர மோடியின் அட்டை சிலைக்கு முத்தம் கொடுத்து வீடியோ எடுத்து உள்ளார். தற்போது இந்த வீடியோவானது இணையதளம் முழுவதும் வைரலாகி வருகிறது. Committed suicide: கல்லூரியில் பணம் கேட்டு நெருக்கடி... மாணவி தற்கொலை..!