Viral Video: "சேதுபதி ஐபிஎஸ்" செந்தில் வேலையைச் செய்த உபி மக்கள்.. தண்டவாளத்தின் நடுவே ரயிலைத் தள்ளி அட்டூழியம்..!
உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தில் பழுதடைந்து பாதியில் நின்ற என்ஜின் இரயில் பெட்டியை இரயில்வே பணியாளர்கள் தங்களது கைகளால் தள்ளிக் கொண்டு செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
மார்ச் 25, உத்தர பிரதேசம் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலத்தின் அமேதி (Amethi) என்கிற பகுதியில் கடந்த மார்ச் 21ஆம் தேதி, வியாழக்கிழமை இரயிலின் என்ஜின் பெட்டி தொழிற்நுட்ப கோளாறு காரணமாக நடு வழியில் செயல்படாமல் நின்றது. மற்ற இரயில்கள் செல்லும் முக்கியமான லைனில் இரயில் நின்றதால், இரயில் பெட்டிக்குள் இருந்த அதிகாரிகளும், இரயில்வே பணியாளர்களும் பதற்றமடைய ஆரம்பித்தனர். எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் இரயில் என்ஜின் பெட்டி அங்கிருந்து நகராததால் வேறு வழியின்றி கைகளால் தள்ளி, தண்டவாளத்தின் வேறொரு லைனில் கொண்டு சென்று நிறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் நிஹால்கர் என்கிற இரயில் நிலையத்திற்கு (Nihalgarh Railway Station) அருகே நடைபெற்றது. தற்போது இந்த வீடியோ தான் இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. Viral Video: கல்யாணத்துக்கு வாங்க.. மொய்யும் வேணாம்.. கிப்ட்டும் வேணாம்.. வேறு ஒன்றைக் கேட்ட பாஜக பிரமுகர்..!
#WATCH : Railway men made to push train coach after snag in UP's Amethi.
The incident happened in Uttar Pradesh's Amethi where a DPC coach, mainly used by Railway officials for inspection, broke down on the main line near the Nihalgarh Railway Station.#Amethi #IndianRailways… pic.twitter.com/2qlc7nE7f2
— upuknews (@upuknews1) March 22, 2024
(The above story first appeared on LatestLY on Mar 25, 2024 01:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

