ஏப்ரல் 22, புதுடெல்லி (New Delhi): மகாராஷ்டிராவைச் சேர்ந்த 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கருத்தரித்துள்ளார். தொடர்ந்து அந்த குழந்தையை கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்குமாறு அந்த சிறுமியின் தாயார் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கினை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. World Earth Day 2024: "தோண்டினாலும் தொய்வடையாது தோள்கொடுத்து காத்திடுவேன் தோழனாய் பூமி.." இன்று உலக பூமி தினம்..!
தொடர்ந்து இந்த வழக்கமானது உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை தீர்ப்பதற்குள் கர்ப்பம் கிட்டத்தட்ட 30 வது வாரத்தை எட்டி விட்டது. இந்நிலையில் மருத்துவக் குழுவின் புதிய மருத்துவ அறிக்கைக்குப் பிறகு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 14 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு (14-Year-Old Rape Survivor To Abort) செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 24-வாரங்கள் என்பது தற்போதைய சட்டத்தின் கீழ் கருக்கலைப்புக்கான வரம்பு ஆகும். அதன் பிறகு, கர்ப்பத்தை நிறுத்த நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
SC permits 14-year-old alleged rape survivor to undergo medical termination of her almost 30-week pregnancy— Press Trust of India (@PTI_News) April 22, 2024