Lee Jae-Myung Stabbed (Photo Credit: @visegrad24 X / Wikipedia)

ஜனவரி 02, பூசன் (World News): கொரியாவின் ஜனநாயகக் கட்சி (Democratic Party of Korea) தலைவராக இருப்பவர் லீ ஜே மேயுங் (Lee Jae Myung). கடந்த 2022 தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய லீ, தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து அவர் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டார். தற்போது கொரியாவில் மக்கள் சக்தி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் ஜனாதிபதியாக யூன் சுக் இயோல் இருக்கிறார், பிரதமராக ஹான் டக்-சூ பணியாற்றி வருகிறார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அதிர்ச்சி: இந்நிலையில், தென்கொரிய அரசியலில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவரான லீ, இன்று பூஷன் (Busan) நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அங்குள்ள கடீவ்க் தீவுப்பகுதியில் (Gadeok Island) புதிதாக அமைக்கப்பட்டு வந்த விமான நிலையத்தின் கட்டுமான பணிகளை நேரில் பார்த்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தயாராகிக்கொண்டு இருந்தார். Paranur Toll Plaza: ஸ்தம்பித்துப்போன பரனூர் சுங்கச்சாவடி; ஒரேநேரத்தில் திரும்பிய மக்களால், கடும் போக்குவரத்து நெரிசல்.! 

கழுத்திலேயே குத்திய இளைஞர்: அச்சமயம், சற்றும் எதிர்பாராத வேளையில் இளைஞர் ஒருவர் லீயின் கழுத்துப்பகுதியில் கத்தியால் குத்தினார். இதனால் நிலைகுலைந்துபோனவர் தவறி விழ, அங்கிருந்த அதிகாரிகள் அவரின் கழுத்தில் கையை வைத்து பிடித்துக்கொண்டனர். இரத்தப்போக்கு ஏற்படாமல் பாதுகாத்து, உடனடியாக அங்கிருந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். உடல்நிலை சீராக இருப்பதாகவும், குற்றவாளி 20 செ.மீ நீளமுள்ள கத்தியை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Lee Jae-Myung Stabbed (Photo Credit: @CollinRugg X)

இளைஞர் கைது: இதனால் தென்கொரிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லீயை கொலை செய்ய முயற்சித்த நபரும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது.

மற்றொரு கோணத்தில் எடுக்கப்பட்ட காணொளி: