ஜனவரி 02, செங்கல்பட்டு (Chengalpattu News): 2024ம் ஆண்டை வரவேற்ற மகிழ்ச்சியுடன், பலரும் இன்று தங்களின் அன்றாட பணியை தொடங்கிவிட்டனர். நேற்றைய நாள் உலகம் முழுவதும் புத்தாண்டு (New Year 2024 Celebration) கொண்டாட்டங்கள் களைகட்டி இருந்தன. தலைநகர் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்பது சிறப்பாக இருந்தது.
களைகட்டிய கொண்டாட்டமும், 3 நாள் விடுமுறையும்: அதேபோல, பல மாவட்ட தலைநகரிலும் மக்கள் தங்களின் புத்தாண்டுகளை சிறப்பித்தனர். சென்னை (Chennai Traffic) போன்ற பெரு நகரில் வசித்து வந்த பலரும் புத்தாண்டை முந்தைய வார இறுதி நாட்கள் விடுமுறையை கணக்கில் எடுத்துக்கொண்டு சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சொந்த ஊர் சென்று இருந்தனர். இவர்களின் பயண சேவையை கருத்தில் கொண்டு, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டன. Japan Earthquake Death: அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் அதிர்ந்துபோன ஜப்பான்; குலுங்கிய சாலைகள்.. 6 பேர் பலி.., 100 வீடுகள் சேதம்.!
சென்னைக்கு திரும்பும் மக்கள்: இந்நிலையில், விடுமுறைக்காக ஊருக்கு சென்ற பலரும், மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர். இதனால் நேற்று நள்ளிரவு முதலாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் பல்வேறு சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் கூட்டம் அலைமோதியது. சென்னையில் உள்ள செங்கல்பட்டு (Chengalpattu Toll Plaza), பரனூர் சுங்கச்சாவடியில், கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல்: பேருந்துகள் மற்றும் கார் போன்ற வாகனங்களில் சொந்த ஊர் சென்றவர்கள், ஒரே நேரத்தில் சென்னை திரும்பி வருவதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு இருக்கின்றன. நேற்று முதல் சென்னையில் உள்ள கிளம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட காரணத்தால், தென்மாவட்ட பேருந்துகள் புறநகர் பகுதியிலேயே நிறுத்தப்பட்டுவிடும். அங்கிருந்து நகரின் பிற பகுதிகளுக்கு செல்ல மாநகர பேருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
#WATCH | Tamil Nadu: Traffic snarls seen at Chengalpattu on the occasion of New Year pic.twitter.com/vme2haZzML
— ANI (@ANI) January 1, 2024