Viral Video (Photo Credit: @Doyouknowmvp X)

ஜனவரி 11, புதுடெல்லி (New Delhi): வட இந்தியாவில் ஒருவர் சாலையோரமாக கடை வைத்து தோசை விற்று வருகிறார். அவர் அங்கு பல்வேறு வகையான தோசைகளை செய்து, குறைவான விலையில் விற்று பிரபலமடைந்துள்ளார். இந்நிலையில் அவர் (Street Food Vendor) எதார்த்தமாக பேசும் ஒரு வீடியோ, தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், "நான் குறைவாக படித்தேன், அதனால்தான் அதிகம் சம்பாதிக்கிறேன்"  (Padha Likha Kam Hun, Isliye Zyada Kamata Hun) என்று அவர் படித்த தொழில் வல்லுனர்களை ட்ரோல் செய்யும் விதத்தில் பேசி உள்ளார். இவரின் இந்த நகைச்சுவையான கருத்தை பலரும் மீம் செய்து சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர். IND Vs AFG: இன்று இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டிகள் தொடக்கம்: விபரம் இதோ.!