ஜனவரி 20, வாஷிங்டன் (World News): அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வென்றவர் டிரம்ப். அதனைதொடர்ந்து, அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். விழாவில், தொழிலதிபர்கள் ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர். இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க இருக்கிறார். Nigeria Petrol Tank Blast: பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரி வெடிச்சிதறி விபத்து; 70 பேர் பரிதாப பலி.!
டிரம்ப் பதவியேற்பு விழா:
தேநீர் விருந்து, டிரம்ப் உரை, அணிவகுப்பு மரியாதையுடன் நடைபெறவுள்ள இந்த பதவியேற்பு விழாவுக்காக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், பதவிக்காலம் முடிவடையும் அதிபர் ஜோ பைடன், விழாவில் கலந்து கொண்டு அதிகாரத்தை டிரம்ப்பிடம் ஒப்படைக்கிறார். பதவியேற்பு விழாவுக்கான கொண்டாட்டங்கள் நேற்று மாலை வானவேடிக்கைகளுடன் கோலகலமாக தொடங்கின. அமெரிக்க நேரப்படி நண்பகல் 12 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும், இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.