செப்டம்பர் 15, தெலுங்கானா (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெதக் மாவட்டம் சபாஷ் பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் மமதா. சித்தி பேட்டை மாவட்டம் ராயப்போல் மண்டலம் வட்டே பள்ளி பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கர். இந்த தம்பதிக்கு கடந்த சில ஆண்டுக்கு முன்பு திருமணம் முடிந்து சரண் (வயது 3), தனுஸ்ரீ (வயது 2) என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மாமியாருடன் மமதாவுக்கு ஏற்பட்ட தகராறை தொடர்ந்து அவர் கோபித்துக் கொண்டு தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்து தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். E Aadhaar App: அறிமுகமாகும் இ-ஆதார் செயலி.. இனி வீட்டில் இருந்தபடி மாற்றம் செய்யலாம்.!
கள்ளக்காதலனுடன் ஓட்டம் :
சுமார் பத்து நாட்கள் அங்கு தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியில் வசித்து வரும் பயாஸ் என்பவருக்கும், மமதாவிற்கும் இடையே நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. பயாஸ் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் பல வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில் தனிமையில் சந்தித்து வந்த ஜோடி ஒரு கட்டத்தில் சேர்ந்து வாழலாம் என முடிவு எடுத்த நிலையில் மமதா 2 வயது பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
2 வயது பெண் குழந்தை மாயம் :
அவரை எங்கு தேடியும் காணாததால் மமதாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பல்நாடு மாவட்டத்தில் மமதா தனது கள்ளக்காதலனுடன் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அங்கு சென்று கள்ளக்காதல் ஜோடியை கைது செய்த காவல்துறையினர் குழந்தை மாயமானது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
குழந்தை அடித்துக்கொலை :
விசாரணையில், உல்லாசத்துக்கு தடையாக இருந்த குழந்தையை மமதா அடித்துக் கொலை செய்ததும், பின் சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி புதைத்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.