Woman Abandons Her 15 Month Old Baby at RTC Bus Stand in Nalgonda (Photo Credit : @ShoneeKapoor X)

ஜூலை 29, ஹைதராபாத் (Telangana News): ஹைதராபாத்தில் தனது குழந்தையை தாய் பேருந்து நிலையத்தில் தனியாக தவிக்க விட்டு சென்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் சம்பவத்தன்று தனது 15 மாத குழந்தையை தனியாக விட்டு, இன்ஸ்டாகிராமில் பழக்கமான ஆண் நண்பருடன் பெண்மணி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் குழந்தை கதறியழவே, அதனை கண்ட பேருந்து நிலைய ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குழந்தையை தந்தையிடம் ஒப்படைத்த போலீசார் :

இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையை மீட்டு சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தனர். மேலும் விசாரணை நடத்தி பெண்மணியையும், அவரது ஆண் நண்பரையும் சில மணி நேரங்களுக்குள்ளேயே கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், பெண்மணியின் கணவரை தொடர்பு கொண்டு அவரிடம் குழந்தையை ஒப்படைத்தனர். பெற்றெடுத்த குழந்தையை தனியாக தவிக்க விட்ட தாய் மகிழ்ச்சியாக இருசக்கர வாகனத்தில் ஆண் நண்பருடன் ஏறி சென்றது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.

பேருந்து நிலையத்தில் குழந்தையை தவிக்கவிட்டு தாய் சென்ற அதிர்ச்சி வீடியோ :