நவம்பர் 01, கான்பூர் (Social-Viral): உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் பகுதியில் சர்ச்சைக்குரிய போட்டோ ஒன்று சமீபத்தில் வைரலானது. அதாவது, உணவு தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஒருவர், பன்னீரை தயார் செய்து தட்டில் வைத்தார்.
பின் அதிலுள்ள நீரை வெளியேற்ற, அதன் மீது ஏறி அமர்ந்தார். பன்னீரின் மேலே மரக்கட்டையை வைத்து, அதன் மீது அமர்ந்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. இதனை பதிவிட்டவர், "பிரதானமான பன்னீரை இதற்கு மேல் யாரும் வாங்கப் போவதில்லை" என்று கூறியிருந்தார். Elon Musk Celebrates Dog Birthday: எலான் மிஸ்கின் செல்லப்பிராணிக்கு இன்று குவா., குவா டே.. கேக் வெட்டி கொண்டாட்டம்.!
இது தொடர்பான புகைப்படம் வெளியாகி பலரையும் பதறவைத்த நிலையில், ஒருவர் அவர் "லுங்கி அணிந்து, மரக்கட்டை வைத்து தானே அமர்ந்திருக்கிறார். இதில் என்ன தவறு?" என்றும், ஒருவர் இதையும் பார்த்துவிட்டு "இனி பன்னீரை சாப்பிடக்கூடாது என்ற முடிவுக்கு நான் வந்து விட்டேன்" என கூறி இருக்கிறார்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் உணவு தயாரிப்பு விஷயத்தில், இதுபோன்ற பல்வேறு குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவை அவ்வப்போது வீடியோவாக வெளியானாலும், உணவுப் பிரியர்கள் அதனை பெரும்பாலும் கண்டு கொள்வது இல்லை.
Never buying non branded paneer after seeing this 😄 pic.twitter.com/DCeOnrp82F
— Azhar Jafri (@zhr_jafri) October 28, 2023