Shafiqur Rahman Barq (Photo Credit: @IANS_India X)

பிப்ரவரி 27, மொராதாபாத் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சாம்பல் மக்களவை தொகுதியின் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ஷபிகுர் ரஹ்மான் பார்க் (Shafiqur Rahman Barq). இவர் மொராதாபாத் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து 4 முறை எம்.எல்.ஏ-ஆகவும், 5 முறை மொராதாபாத் மற்றும் சாம்பல் தொகுதியில் இருந்து எம்.பி ஆகவும் தேர்வு செய்யப்பட்டார்.

1977ல் முதல் வெற்றி: தற்போது 94 வயதாகும் தருவாயிலும், தீவிர அரசியல் ஈடுபாடு கொண்ட ஷபிகுர் தொடர்ந்து அரசியல் பயணங்களை மேற்கொண்டு வந்தார். தனது வாழ்நாளில் 30 வயதுக்கு பின், உ.பி-யின் முன்னாள் முதல்வர் சரண் சிங் தோற்றுவித்த பாரதிய கிராந்தி தளம் கட்சியில் இணைந்து சாம்பல் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ-வாக 1977 தேர்வு செய்யப்பட்டார். Road Accident 5 Died: லாரியின் பின்னால் சொருகி உருக்குலைந்த கார்; 5 தொழிலாளர்கள் பரிதாப பலி.! 

4 முறை எம்.எல்.ஏ - 5 முறை எம்.பி: அதனைத்தொடர்ந்து ஜனதா தல், லோக் தல், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றிலும் பயணித்து சட்டப்பேரவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டபோதிலும், இறுதியில் சமாஜ்வாடி காட்சியிலேயே அவர் பயணித்து வருகிறார். மொராதாபாத், சாம்பல் தொகுதியில் ஷபிகுருக்கு இருக்கும் ஆதரவு, தொடர்ந்து அவரை பலமுறை எம்.எல்.ஏ - எம்.பி பொறுப்புகளில் அமர்த்தி இருக்கிறது.

ஷபிகுர் ரஹ்மான் மறைவு: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதற்கு வரவேற்பு தெரிவித்து அவர் சர்ச்சையில் சிக்கிய நிலையில், வந்தே மாதரம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பதால், அதனை இஸ்லாமிய மக்கள் உரைக்க கூடாது என கூறி பலரையும் அதிரவைத்தார். இவ்வாறான சர்ச்சையில் சிக்கிய எம்.பி, கடந்த சில மாதமாகவே உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று உடல்நலக்குறைவால் அவரின் உயிர் பிரிந்தது. ஷபிகுர் ரஹ்மான் பார்க் மறைவுக்கு பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.