செப்டம்பர் 08, விக்கிரவாண்டி (Viluppuram News): தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் (TVK Vijay), 2026 சட்டப்பேரவை தேர்தலில் களம்காணவுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை விறுவிறுப்புடன் செய்து வரும் நிலையில், மாவட்ட வாரியாக கட்சியின் செயல்பாடுகளை நிர்வாகிகளை கொண்டு தீவிரப்படுத்தி இருக்கிறார். அரசியல் வருகை தொடர்பாக விஜய் அறிவிப்பு வெளியிட்டதும், அவரின் ரசிகர்களும் தீவிர களப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, விக்கிரவாண்டி (Vikravandi) பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam Campaign) முதல் மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், விக்ரவாண்டியில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காவல்துறையிடம் மாநாடு நடத்த அனுமதிகேட்டும் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. முதலில் த.வெ.க தலைமையிடம் காவல் துறை அதிகாரிகள் கேள்விகளை எழுப்பி இருந்தனர். Teenager Murder: காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிப் படுகொலை; காதலியின் தந்தை கைது..!
நிபந்தனைகளுடன் அனுமதி:
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்ரவாண்டியில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு நடத்த 21 நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் 21 கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்த நிலையில், அவற்றுக்கு தவெக தலைமை பதிலளித்த நிலையில், காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 23ம் தேதி த.வெ.க-வின் முதல் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 15 ஆயிரம் ஆண்கள், 5 ஆயிரம் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட 20 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என ஏற்கனவே த.வெ.க தலைமை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. சிறார்களுக்கு அனுமதி வழங்ப்படாது எனவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில், அதன் பேரில் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.