Viral Video (Photo Credit: @Thaadikkaran X)

அக்டோபர் 22, டெல்லி (Delhi News): நம் வீட்டில் சமைக்கப்படும் உணவுகளைப் போல வெளியில் சாப்பிடும் அனைத்து உணவுகளும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு தான் சாப்பிடுகிறோம். ஆனால் சமீப காலமாக உணவுப் பொருட்களில் எதிர்பாராத அதிர்ச்சி தரும் பொருட்கள், புழு, பூரான், எலி என கண்டுபிடிக்கப்படுவது வேதனை அளிக்கும் ஒன்றாக உள்ளது.

சமீபத்தில், லேஸ் பாக்கெட்டுகளில் கரப்பான் பூச்சி கண்டறியப்பட்டது. வேஃபர்ஸ் பாக்கெட்டில் ஒரு பொரித்த தவளை கண்டறியப்பட்டது. மேலும் ஒரு குடும்பத்தினர் வாங்கிய ஹேர்ஷேஸ் சாக்லேட் சிரப் பாட்டிலில் இறந்த எலியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டுமின்றி மலாட்டைச் சேர்ந்த 26 வயது மருத்துவர், ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித கட்டைவிரலைக் கண்டுபிடித்தார். BRICS Summit 2024: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு.. ரஷ்யா புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி.!

அந்த வகையில், தற்போது டெல்லியைச் சேர்ந்த ஆரன்ஷ் சிங் என்பவர் சில நாட்களுக்கு முன்பு ரயிலில் பயணம் செய்துள்ளார். இதனிடையே, ரயில் அவருக்கு வழங்கப்பட்ட உணவில் உயிருடன் பூரான் ஒன்று மிதந்துள்ளது. பின்னர், இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ”இந்திய ரயில்வே உணவின் தரம் மேம்பட்டுள்ளது. தற்போது ரயில்வே துறையினர் அதிக புரதத்துடன் ரைதாவை வழங்கி வருகின்றனர்” என பதிவிட்டுள்ளார்.

ரயிலில் அளிக்கப்பட்ட உணவில் பூரான்: