வானிலை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழை எச்சரிக்கை.!

Weather: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழை எச்சரிக்கை.!
Tamilnadu Rains File Pic (Photo Credit : @ETVBharatTN X)

அக்டோபர் 31, நுங்கம்பாக்கம் (Chennai News): தமிழகத்துக்கு அதிக மழை பொழிவைத் தரும் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. இதன் அறிகுறிகளாக வங்கக் கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதனால் வங்கக்கடலில் மோன்தா புயல் உருவாகி இருந்தது. இந்த புயலின் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர் உட்பட வடதமிழக மாவட்டங்களிலும் மழை பெய்தது. இந்த நிலையில் அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:

கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை அதே பகுதிகளில் நிலவியது. இது அடுத்த 2 தினங்களில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் புயல் உருவாகும் வாய்ப்பும் உள்ளது. மேலும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். Gold Rate Today: இன்றைய தங்கம் & வெள்ளி விலை நிலவரம் என்ன?.. விபரம் இதோ.!

சென்னை வானிலை (Chennai Weather):

சென்னை வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்த நேரடி விண்டி அப்டேட் (Windy Weather Update):

(The above story first appeared on LatestLY on Oct 31, 2025 10:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).