Allu Arjun | Director Atlee Kumar (Photo Credit: @AlluArjun / @Atlee_Dir X)

பிப்ரவரி 10, கோடம்பாக்கம் (Cinema News): தமிழில் ராஜா ராணி, கத்தி, தெறி, மெர்சல் என ஹிட் படங்களை கொடுத்து, கொண்டாட்டத்தை ஏற்படுத்திய இயக்குனர் அட்லீ (Atlee Kumar). தமிழ் படங்களில் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்ட அட்லீ, ஹிந்தியில் நடிகர் ஷாரூக்கானுடன் இணைந்து ஜவான் படத்தை இயக்கி வழங்கி உலகளவில் கவனிக்கப்பட்டார். ஜவான் திரைப்படம் ரூ.1500 கோடிகளை கடந்து பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை நடத்தியது. தற்போது அட்லீ விஜய் சேதுபதி நடிக்கும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். Nilavuku Enmel Ennadi Kobam: காதலுக்கும்-தோல்விக்கும் நடுவுல சிக்கி தவிக்கிறேன் - தனுஷின் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் அசத்தல் ட்ரைலர்.! 

அட்லீ - அல்லு அர்ஜுன் இணைந்து தயாராகும் படம்?

அதேபோல, தெலுங்கு திரையுலகில் சாக்லேட் பாயாக வலம்வந்த நடிகர் அல்லு அர்ஜுன், புஷ்பா என்ற செம்மரக்கடத்தல் தாதா தொடர்பான கதையில் நடித்து இந்திய அளவிலும், உலகளவிலும் கவனிக்கப்பட்டார். புஷ்பா படத்தைதொடர்ந்து புஷ்பா 2 திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி மற்றும் வசூல் வேட்டையை குவித்தது. இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் - இயக்குனர் அட்லீ ஆகியோர் திரைப்படத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வழங்கலாம் என்றும், அட்லீ இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.