செப்டம்பர் 11, சென்னை (Chennai): விஜய் தொலைக்காட்சியில் (Vijay Television) ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் (BiggBoss Tamil) நிகழ்ச்சி, 2024ல் தனது 8வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. இந்த சீசனை முதல் முறையாக நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்து வழங்குகிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் பிக் பாஸ் 8ல், நடிகர்கள் தேர்வு நிறைவு பெற்று, விரைவாக பிக் பாஸ் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், செப் 11ம் தேதியான இன்று மாலை 05:00 மணியளவில், பெசன்ட் நகர் கடற்கரையில் வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ (BiggBoss Tamil Promo), மக்கள் முன்னிலையில் மக்களால் வெளியிடப்படுகிறது. இந்த அறிவிப்பை விஜய் டிவி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல, விருதுநகரில் அப்சரா சினிமாஸ், கடலூர் மஞ்சக்குப்பம் போஸ்ட் ஆபிஸ், கோவையில் கொடிசியா விளையாட்டு மைதானம், சேலத்தில் சக்தி கைலாஷ் பெண்கள் கல்லூரி, நெல்லையில் பெல் ஸ்கூல் நுழைவு வாயில், திருச்சியில் பிரீஸ் ஹோட்டல், வேலூரில் பழைய பேருந்து நிலையம், மதுரையில் அம்பிகா கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு திண்டல் வெள்ளாளர் கல்லூரி ஆகிய இடங்களில் வைத்து வெளியிடப்படுகிறது. இதற்காக பிரத்தியேக ஸ்க்ரீன் வைத்துள்ள வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Bigg Boss Season 8 Tamil: "வந்தாச்சு புது பிக் பாஸ்".. அடடே யாருமே எதிர்பார்க்கலையே.. விஜய் சேதுபதி அசத்தல்..! 

10 இடங்களில் ப்ரோமோ வெளியிடப்படும் அறிவிப்பு குறித்த வீடியோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)