செப்டம்பர் 23, சென்னை (Television News): விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன் பெரிய எதிர்ப்பார்ப்பில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சி இங்கு சூப்பர் டூப்பர் ஹிட். 7வது சீசன் முடிந்த கையோடு அடுத்த சீசனிற்கும் ரசிகர்கள் தயாராகிவிட்டனர். இந்த முறை விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) அறிமுகமாகி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பட்டியல் என்று ஒன்று சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில், பாரதிகண்ணம்மா சீரியல் கதாநாயகனாக நடித்த அருண் பிரசாத், நடிகை தர்ஷா குப்தா, பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்த ஃபரீனா ஆசாத், செல்லம்மா சீரியல் நடிகை அக்ஷிதா மற்றும் நடிகர் அர்னவ், அதுபோல தொகுப்பாளராகவும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கதாநாயகனாகவும் நடித்த நடிகர் தீபக், 'குக்கு வித் கோமாளி' சுனிதா, நடிகர் வினோத் பாபு மற்றும் பவித்ரா ஜனனி, தயாரிப்பாளர் ரவீந்தர், டிடிஎப் வாசன் மற்றும் அவருடைய காதலி ஜோயா போன்ற பலருடைய பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. இதையடுத்து பிரம்மாண்டமாக தொடங்கப்படும் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் முதல் வாரம் அதாவது 6-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Kottukkaali Wins Grand Prix Award: ரஷ்ய திரைப்பட விழாவில் விருது வென்ற கொட்டுக்காளி.. தமிழில் பேசி கலக்கிய இயக்குநர்.!

பிக் பாஸ் தமிழ் சீசன் 8:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)