மே 30, மீரட் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மீரட்டில் (Meerut) உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் கே.பி. விடுதியில் டி.கே. சவுகான் என்பவர் விடுதி வார்டனாக பணியாற்றி வருகிறார். இவர், இரவு நேர சோதனையின் போது விடுதியில் உள்ள மாணவர்களை குச்சியால் அடித்து, கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. தரையில் தண்ணீர் சிந்தியதாலும், மாணவர்கள் அறைகளில் மாறிக் காணப்பட்டதாலும் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, நூற்றுக்கணக்கான மாணவர்கள் விடுதி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்து, 24 மணிநேரத்திற்குள் வார்டனை நீக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தாயுடன் தகாத உறவு.. நண்பரை கொன்று உடலை வயலில் அடக்கம் செய்த வாலிபர்..!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)