Crime Scene (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 14, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பெங்களூருவில் (Bengaluru) உள்ள கோனப்பன அக்ரஹாராவில் வசித்தவர் நுாருல்லா (வயது 32). இவர், கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி இரவு நண்பருடன் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது டீக்கடை முன்பு, சில வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை நுாருல்லா தட்டிக் கேட்டார். இதனால் வாலிபர்களில் சிலர் அவரை கடுமையாக தாக்கினர். இதில், கோபம் அடைந்த அவர், தனது நண்பர்கள் சிலரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அங்கு வரவழைத்தார். Woman Rape Case: பேருந்தில் வைத்து பெண் பாலியல் வன்கொடுமை; ஓட்டுநர் உட்பட இருவர் கைது..!

வாலிபர் படுகொலை:

இதனையடுத்து, இரு கும்பலுக்குள் கடும் மோதல் ஏற்பட்டது. இதில், ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அப்போது, அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து, நுாருல்லாவை தாக்கி விட்டு (Murder), வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நுாருல்லா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (பிப்ரவரி 13) காலை பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.