ஜூலை 20, மத்திய பிரதேசம் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் பி.எம்.ஸ்ரீ பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் மாணவர்கள் லேசான காயங்களுடன் உயர் தப்பினர். முன்னதாகவே பள்ளியின் நிலை குறித்து அரசிடம் புகாரளிக்கப்பட்டு இருந்த நிலையில், அலட்சியம் காட்டியதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பள்ளி வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது குறித்த வீடியோ :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)