அக்டோபர் 16, சென்னை (Chennai News): மத்திய அரசு அமல்படுத்திய ஜிஎஸ்டி வரி விகிதம் சமீபத்தில் குறைத்து அறிவிக்கப்பட்டது. ஆனால், தங்கத்தின் விலை மட்டும் உச்சத்துக்கு சென்றுள்ளது. குறிப்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி வரி குறைப்பு நடுத்தர மக்களுக்கு நல்லதாக அமைந்தாலும், பண்டிகை காலத்தில் வியாபரிகளின் எண்ணம் கூடுதல் இலாபத்தை நோக்கி இருக்கும் என்பதால், ஒருபக்கம் ஆபர் அறிவிப்பு இருந்தாலும், மறுபக்கம் நூதனமாக விலையை ஏற்றி விற்பனை களைகட்டுகிறது. பண்டிகை என்றாலே நல்ல துணி உடுத்த வேண்டும், பலகாரம் வாங்க வேண்டும் என்பது மக்களிடையே பழகிப்போய்விட்டதால், அதனை வைத்து வியாபாரமும் களைகட்டுகிறது. இந்த நிலையில், துணிக்கடைக்கு சென்றவர் ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் தனக்கு நேர்ந்த அதிர்ச்சி குறித்து விளக்கி இருக்கிறார். அந்த பதிவு வைரலாகி வருகிறது. அப்பதிவு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. Health Warning: சமோசா பிரியரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த முக்கிய தகவல்.! 

தீபாவளிக்காக சட்டை - பேண்ட் எடுக்கச் சென்றவருக்கு ஜிஎஸ்டி வைத்த ஆப்பு:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)