ஆகஸ்ட் 08, நீலகிரி (Nilgiris News): காட்டெருதுகள் பசுக்களைக் காட்டிலும் உடலமைப்பில் பெரியவை. வயதுவந்த காட்டெருது (Gaurs) சுமார் 600 முதல் 1000 கிலோ எடையும் 1.6 முதல் 1.9 மீட்டர் உயரமும் இருக்கும். இவை காலையிலும் மாலையிலும் மிகவும் சுறுசுறுப்புடன் இரை தேடும். வெயில் நிறைந்த பகல் நேரங்களைப் பெரும்பாலும் மரநிழலில் ஓய்வெடுத்துக் கழிக்கும். தற்சமயம் இவ்விலங்கு வாழும் காடுகளில் மனிதர்களால் ஏற்படும் தொல்லைகளைத் தவிர்ப்பதற்கு இரவு நேரங்களில் இரை தேடுகின்றது. இவை மந்தைகளில் 2 முதல் 40 மாடுகள் வரை இருக்கும். ஒரு மந்தையை மூத்த ஆண் ஒன்று தலைமையேற்று நடத்திச் செல்லும். மந்தையின் ஒரு விலங்கு எச்சரிப்பு ஒலி எழுப்பினால் அனைத்து விலங்குகளும் கணப்பொழுதில் காட்டுக்குள் ஓடி மறைந்துவிடும். இவை தென்மேற்கு இந்தியா, மத்திய இந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியா (நேபாளம், பூட்டான் மற்றும் பங்களாதேஷ் உட்பட) ஆகிய மூன்று பகுதிகளில் காணப்படுகின்றன. இந்நிலையில் நீலகிரியிலுள்ள தேயிலை தோட்டத்தில் காட்டெருதுகள் குடும்பமாக அழகாக நடந்துச் செல்லும் வீடியோவானது வெளியாகி காண்போர் மனதை கொள்ளையடித்து வருகிறது. Mia Khalifa Banner For Aadi Perukku Festival: அம்மன்கோவில் திருவிழாவில் பால்குடம் எடுத்த மியா; ரசிகர்களின் சர்ச்சை செயலால் பரபரப்பு..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)