ஜூலை 15, ராஜஸ்தான் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மதுரா தாஸ் மாத்தூர் மருத்துவமனையை சேர்ந்த மாணவர்கள் ஐந்து பேர், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பால் வண்டியில் இருந்து பால் பாக்கெட்களை திருடியுள்ளனர். இவர்கள் திருடும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாக, அப்பகுதியை சேர்ந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்ய சென்றுள்ளனர். அப்போது இரண்டு பேர் தலைமறைவாகியுள்ளனர். தொடர்ந்து டாக்டர் எஸ்என் மருத்துவக் கல்லூரியின் எம்பிபிஎஸ் மாணவர் விகாஸ் விஷ்னோய் (22), செட்வா காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் ஜாட் (23), குடா மலானியின் டபார் கிராமத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர் மகேஷ் விஷ்னோய் (22) ஆகியோர் மேல் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். One Day Village Trip: கிராமத்தில் ஒரு நாள்.. இனிமே இங்கேதான் வீக் எண்ட்.. வாங்க போகலாம்..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)