மார்ச் 19, சென்னை (Sports News): இந்தியன் பிரீமியர் லீக் 2025 (IPL 2025) தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் எம்எஸ் தோனி (MS Dhoni) பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் கேப்டன், நேற்றைய தினம் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடந்த சிஎஸ்கே அணியின் பயிற்சி ஆட்டத்தின் போது, வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரானாவுக்கு எதிராக தனது பழைய "ஹெலிகாப்டர் ஷாட்" மூலம் சிக்சர் அடித்தார். இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. Sam Curran: சிஎஸ்கே அணியில் இணைந்தார் சுட்டிக்குழந்தை; ஐபிஎல் 2025 போட்டிக்கு பயிற்சி தொடக்கம்.!
வீடியோ இதோ:
Thala Dhoni Helicopter Shot in Pathirana's bowling 💥#MSDhoni pic.twitter.com/6VoEWDgm6a
— Chakri Dhoni (@ChakriDhonii) March 18, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)