ஜனவரி 24, டெல்லி (Sports News): இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டிகள், மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதியில் (IPL 2025 Schedule) நிறைவுபெறும். இதில், பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நடப்பு கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் இருக்கிறார். சிஎஸ்கே அணி கடந்த 2010, 2011, 2018, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் வெற்றிக்கோப்பையையும் தட்டிச்சென்றுள்ளது. இந்நிலையில், சென்னை அணியின் முன்னாள் கேப்டனாக இருந்து வந்த எம்எஸ் தோனி (MS Dhoni), எதிர்வரும் ஐபிஎல் 2025 போட்டிக்கு தயாராகி, வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பான புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில், வலைப்பயிற்சியின் போது எம்எஸ் தோனி செல்போன் பயன்படுத்தும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. MS Dhoni: ஐபிஎல் 2025 போட்டிக்கு தயாராகும் தல தோனி; தீவிர பயிற்சி.. வைரல் க்ளிக்ஸ் லீக்.!
வீடியோ இதோ:
Rare video of MS Dhoni using Mobile that too in the net session 😁❤️#MSDhoni #IPl2025 pic.twitter.com/0IgzQi2QZz
— Chakri Dhoni (@ChakriDhonii) January 24, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)