ஜூலை 19, மும்பை (Sports News): இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டு வருபவர் தான் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya). மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உருவெடுத்ததில் இருந்தே பல சர்ச்சைகளுக்கு பேர் போன ஹர்திக் பாண்டியாவினை, அவரின் மனைவி நடாசா ஸ்டான்கோவிச்சை (Natasha Stankovic) பிரிந்து சென்று விட்டதாக பல வதந்திகள் பரவி வந்தன. அதன்படி இருவரும் தனித்தனியாக எடுத்த புகைப்படங்களை மட்டுமே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டும் வந்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரிவதாக தங்களது இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதில், "நான்கு ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நிலையில் தற்போது நாங்கள் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இது எங்கள் இருவருக்கும் நல்லது என நம்புகிறோம். எங்களது மகன் அகஸ்தியா எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் தொடர்ந்து இருப்பார். அவரின் மகிழ்ச்சிக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று உறுதி செய்கிறோம். இந்த கடினமான நேரத்தில் உங்கள் ஆதரவினை கேட்டுக்கொள்கிறோம்" என பதிவிட்டுள்ளனர். Bike Accident: பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து.. தாய், மகன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)