மார்ச் 27, சென்னை (Sports News): 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் (IPL 2025) தொடர் கிரிக்கெட் ரசிகர்களின் அமோக வரவேற்புடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இந்நிலையில், நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி வரை புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியது. ராஜஸ்தான் அணி 10வது இடத்தில் உள்ளது. முதல் நான்கு இடங்களில் ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப், சென்னை அணிகள் இடம்பெற்றுள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஐதராபாத்-லக்னோ அணிகள் மோதுகின்றன.  SRH Vs LSG: ஐபிஎல் 2025: இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மோதல்; ஆட்டம் எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!

ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியல்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)