மார்ச் 27, ஹைதராபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 கிரிக்கெட் (TATA IPL 2025 T20 Cricket) போட்டித்தொடரில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. ஆட்டத்தின் முடிவில் கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் வீரர் குயின்டன் டி காக், கிட்டத்தட்ட சதத்தை நெருங்கி வெளுத்தது வாங்கி இருந்தார். அதனைத்தொடர்ந்து, இன்று (27 மார்ச் 2025), ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, ஏழாவது போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Sunrisers Hyderabad Vs Lucknow Super Giants) அணிகள் மோதிக்கொள்கின்றன.
லக்னோ எதிர் ஹைதராபாத் (Sunrisers Vs Super Giants):
எல்எஸ்ஜி Vs எஸ்ஆர்எச் அணிகளுக்கு இடையேயான ஆட்டம், இரவு 07:30 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. 07:00 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 30 நிமிட இடைவெளிக்கு பின்னர் ஆட்டம் தொடங்கும். தலா 1 போட்டியை இதுவரை எதிர்கொண்டுள்ள இரண்டு அணிகளில், ஹைதராபாத் ஒன்றில் வெற்றி அடைந்துள்ளது. லக்னோ தோல்வி அடைந்தது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. KKR Vs RR: சதத்தை நெருங்கி மாஸ் காட்டிய குயின்டன்; கொல்கத்தா அணி முதல் வெற்றி.. ராஜஸ்தான் படுதோல்வி.!
சன்ரைசர்ஸ் எதிர் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வீரர்கள் விபரம்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் (SRH Squad IPL 2025) அங்கித் வர்மா, டார்விஸ் ஹெட், சச்சின் பேபி, அபினவ் மனோகர், இஷான் கிஷான், ஹென்ரிச் காளீசன், அதர்வா டைடெ, நிஷா குமார் ரெட்டி, அபிஷேக் சர்மா, கமிண்டு மெண்டிஸ், வியான் முல்டர், பேட் கம்மின்ஸ் (Pad Cummins), ஹர்ஷல் படேல், ராகுல் சாகர், ஜெயதேவ் உடன்கட், ஆடம் ஜாம்பா, ஈசன் மலிங்கா, ஸிஷன் அன்சாரி, முகமது சமி, சிமர்ஜீத் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (LSG Squad IPL 2025) அணியில் ரிஷப் பண்ட் (Rishabh Pant), டேவிட் மில்லர், ஹிம்மத் சிங், ஏய்டன் மார்க்கம், ஆயுஷ் படோனி, நிகோலஸ் பூரான், மெத்திவ் ப்ரெட்ஸ், ஆர்யன் ஜுயல், அர்ஷின் குல்கர்னி, யுவராஜ் சௌதரி, மிட்செல் மார்ஷ், ஷநபாஸ் அகமத், அப்துல் சமத், ரஜ்வர்தன் காங்ரேக்கர், ஆகாஷ் தீப், ஷரத்துல் தாகூர், ஆவேஷ் கான், பிரின்ஸ் யாதவ், சமர் ஜோசப், திக்வேஸ் சிங், ரவி பிஷ்ணோய, எம் சித்தார்த், ஆகாஷ் சிங், மயங்க் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.