நவம்பர் 09, ராஞ்சி (Sports News): இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி (MS Dhoni). இதுவரை கிரிக்கெட்டில் பல வியக்கத்தக்க சாதனைகளை செய்துள்ள தோனி, சச்சினுக்கு பின் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். அதிரடி பேட்டிங், விக்கெட் கீப்பிங் போன்றவற்றில் கைதேர்ந்த தோனி திருமண வாழ்க்கையில் காதலித்து கரம்பிடித்தவர் ஆவார். எம்.எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரியில் தோனியின் வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களும், அதன் பின் அவர் சாதனை படைத்த நிகழ்வுகளும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். தோனியின் அர்பணிப்பு & வெற்றிக்கு அடையாளமாக மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை வழங்கி கௌரவித்து இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எம்.எஸ்.தோனி ஓய்வை அறிவித்த நிலையில், ஐபிஎல் தொடரில் மட்டும் கவனம் செலுத்தி விளையாடி வருகிறார். சமீப காலமாகவே தோனி குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ரசிகர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தில் எம்.எஸ். தோனி ஆட்டோகிராப் போடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. இது குறித்த வீடியோவை பகிரும் பலரும், 'இது ரசிகருக்கான ஆட்டோகிராப் மட்டும் கிடையாது. அவரது பழைய நினைவுகளும் கூட' என தெரிவித்து வருகின்றனர். IND Vs AUS 5th T20I: இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட்.. டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா.. கருணை காட்டிய வருண பகவான்.!

ரசிகரின் இருசக்கர வாகனத்தில் ஆட்டோகிராப் போட்ட எம்.எஸ். தோனி:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)