மார்ச் 28, ஐதராபாத் (Sports News): 2025 ஐபிஎல் தொடரில், நேற்று (மார்ச் 27) நடைபெற்ற 7வது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (SRH Vs LSG) அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணிக்கு ஆரம்பத்திலேயே, அபிஷேக் சர்மா 6 மற்றும் இஷான் கிஷான் 0 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனையடுத்து களமிறங்கிய ஆல் ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி (All-Rounder Nitish Kumar Reddy), 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அவர் தனது பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்பினார். ஆனால், பெரிய ஷாட்களை அடிக்க முயற்சிக்கும்போது அவுட் ஆனார். ரவி பிஷ்னோய் வீசிய 15வது ஓவரின் முதல் பந்திலேயே போல்ட் ஆனார். நிதிஷ் குமார் ரெட்டி அவுட் ஆனபோது, பெவிலியனில், கோபத்தில் தனது ஹெல்மெட்டை வீசினார். இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. SRH Vs LSG Highlights: முதல் வெற்றியை உறுதி செய்த லக்னோ.. திணறிப்போன ஹைதராபாத்.! அசத்தல் ஹைலைட்ஸ் இதோ.!
வீடியோ இதோ:
Nitish Kumar Reddy throws his helmet on the way up the stairs—frustration? 😳#IPL #GameOn #SRHvsLSG #OrangeArmy𓅃 pic.twitter.com/VNRfBT6Xof
— Rasigan@Fan🎙️ (@Rasigan_022) March 27, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)