LSG Vs SRH | Match 7 | IPL 2025 (Photo Credit: @IPL X)

மார்ச் 27, ஹைதராபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 கிரிக்கெட் (TATA IPL 2025 T20 Cricket) போட்டித்தொடரில், இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Sunrisers Hyderabad Vs Lucknow Super Giants) அணிகள் மோதிக்கொள்கின்றன. எல்எஸ்ஜி Vs எஸ்ஆர்எச் அணிகளுக்கு இடையேயான ஆட்டம், இரவு 07:30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பௌலிங் செய்தது. இதனால் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. Abhishek Sharma & Ishan Kishan: அடுத்தடுத்த பந்துகளில் பறிபோன விக்கெட்..ஷாக் தந்த இஷான்.. ஷரத்துல் தாகூர் அசத்தல் பந்துவீச்சு.!

லக்னோ அணிக்கு 191 ரன்கள் இலக்கு:

ஹைதராபாத் அணியின் சார்பில் விளையாடிய டார்விஸ் ஹெட் 28 பந்துகளில் 47 ரன்கள், நிதிஷ் குமார் ரெட்டி 28 பந்துகளில் 32 ரன்கள், ஹென்றிச் 17 பந்துகளில் 26 ரன்கள், அங்கித் வர்மா 13 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தனர். ஆட்டத்தின் முடிவில் ஹைதராபாத் அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் ஷரத்துள் தாகூர் 4 விக்கெட் எடுத்து அசத்தி இருந்தார். இதனால் லக்னோ அணிக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

லக்னோ அணி திரில் வெற்றி:

லக்னோ அணியின் சார்பில் களமிறங்கியவர்களில் மிட்செல் 31 பந்துகளில் 52 ரன்கள், நிகோலஸ் பூரான் 26 பந்துகளில் 70 ரன்கள், அப்துல் ஸமீத் 8 பந்துகளில் 2 ரன்கள் அடித்து அசத்தினர். இதனால் 16.1 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்ததால் லக்னோ அணி வெற்றி அடைந்தது.

அசத்தல் கேட்ச்:

சிக்ஸர் மழையில் பூரான்:

அங்கித் வர்மா அசத்தல்:

குறி வச்சா இற விழணும்: