IND Vs PAK 06 Oct 2024 (Photo Credit: @StarSports X)

அக்டோபர் 06, அமீரகம் (Cricket News): துபாயில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை டி20 2024 (2024 ICC Women's T20 World Cup) போட்டிகளில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உட்பட 10 நாடுகள் மோதிக் கொள்கின்றன. இதில், இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

பரிதவித்துப் போன பாகிஸ்தான்:

இந்நிலையில், அக்டோபர் 06ம் தேதியான இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி நடைபெற்றது. போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பேட்டிங் தேர்வு செய்தது. தொடர்ந்து அந்த அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்கள், அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பரிதவித்துப் போயினர். Chennai Air Show: இலட்சக்கணக்கில் திரண்ட சென்னை மக்கள்.. வானில் சாகசம் செய்து அசத்திய இந்திய விமானப்படை.. அசத்தல் கிளிக்ஸ் இங்கே.! 

அந்த அணியின் சார்பில் விளையாடிய முபீனா அலி 26 பந்துகளில் 17 ரன்னும், நிடா தார் 31 பந்துகளில் 27 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்பரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதனால் ரன்களை குவிக்க இயலாமல் திணறிய பாகிஸ்தான அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

 106 ரன்கள் இலக்கு;

இதனால் இந்திய அணி என்ற சொற்ப இலக்கை எட்டி தனது அடியை எடுத்து வைத்துள்ளது. இந்திய அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டையும், ஷ்ரேயன்கா 2 விக்கெட்டையும், ரேணுகா, தீப்தி, ஆஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தியிருந்தனர். எளிய இலக்கை இந்திய அணி விரைவில் எட்டிப்பிடித்து வெற்றியை தனதாக்கும் என ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.

இன்றைய ஆட்டத்தில் பூஜா வஸ்திரக்கர் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அனில் சஞ்சனா இடம்பெற்றார். இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி, ஹாட்ஸ்டார் செயலிகளில் நேரலையில் பார்க்கலாம்.

ரேணுகா சிங்கின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த பெரோசா: