
பிப்ரவரி 18, வதோதரா (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA WPL 2025) போட்டியில், ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று குஜராத் மாநிலம் வதோதரா, பிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெயிண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணிகள் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 07:30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இன்றைய ஆட்டம் இரண்டாவது வெற்றிக்காக குஜராத் அணியும், முதல் வெற்றிக்காக மும்பை அணியும் போராடும் என்பதால், இன்றைய ஆட்டம் விறுவிறுப்புடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். DC Vs RCB WPL 2025: டெல்லியை துவைத்தெடுத்த பெங்களுர்.. ஸ்மிருதி பக்கா மாஸ்., ரேணுகா அபாரம்.!
குஜராத் ஜெயிண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (GG Vs MI WPL 2025) பெண்கள் பிரீமியர் லீக்:
குஜராத் கிரிக்கெட் (Gujarat Giants Women's WPL Squad 2025) அணியில் புமாலி, ஹேமலதா, வோல்வார்ட், லிட்சிபீல்ட், சைக், கார்ட்னெர், சிப்சன், டோடின், டியோல், சத்கரே, மூனி, கைஸ்யப், மேகா சிங், பிரக்சிதா நாயக், பிரியா மிஸ்ரா, சப்னம், தனுஜா கன்வர், காசவ் கௌதம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அணியை கேப்டனாக (Gujarat Giants Women's Team Captain) ஆஷ் கார்ட்னெர் (Ashleigh Gardner) வழிநடத்துகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் (Mumbai Indians Women's Squad) ஹேலி மேத்யூஸ், யஸ்திகா பாட்டியா, நடாலி ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்பிரீத் கவுர் (சி), அமெலியா கெர், சஜானா எஸ், அமன்ஜோட் கவுர், ஜிந்திமணி கலிதா, சான்ஸ்கிரித குப்தா, சைக்கா உய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.