பிப்ரவரி 20, வதோதரா (Sports News): நடப்பாண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் (Women's Premier League 2025) தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மூன்றாவது சீசனில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில், 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், நேற்று நடந்த 6வது போட்டியின் முடிவில், புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி (RCBW) அணி முதலிடத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இரண்டாம் இடத்தில், டெல்லி (DCW) அணியும், 3வது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் (MIW) அணியும் இடம்பெற்றுள்ளன. மூன்று போட்டிகள் விளையாடி, அதில் ஒரு வெற்றியை பதிவு செய்த குஜராத் (GGTW) அணி 4வது இடத்திலும், 2 போட்டியிலும் தோல்வியை தழுவிய உபி வாரியர்ஸ் (UPW) 5வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், நாளை (பிப்ரவரி 21) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 7வது லீக் போட்டியில், பெங்களூரு - மும்பை அணிகள் மோத உள்ளன. இதனால், இப்போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. RCB Vs MI WPL 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ்; பெண்கள் பிரீமியர் லீக் 2025.!
மகளிர் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியல்:
Vadodara ✅
🆙 ⏭️ Bengaluru#RCB remain at 🔝 as the first leg in #TATAWPL 2025 comes to an end 🙌 pic.twitter.com/iDN25m42iu
— Women's Premier League (WPL) (@wplt20) February 19, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)