Smriti Mandhana | Harmanpreet Kaur (Photo Credit: @WPLT20 X)

பிப்ரவரி 20, பெங்களூர் (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 போட்டி, விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் எம். சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி மோதுகிறது. இந்த ஆட்டம் நாளை (21 பிப். 2025) இரவு 07:30 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. இன்றைய ஆட்டம் மும்பை - பெங்களூர் பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு நேரடியாக பெங்களூர் மைதானத்தில் நடக்கிறது. கடந்த 6 ஆட்டங்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்ற நிலையில், இன்று முதல் அடுத்த சில ஆட்டங்கள் பெங்களூரில் நடைபெறுகிறது. பெங்களூரு - மும்பை அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம். UPW Vs DC Highlights: இறுதிவரை பரபரப்பு.. திரில் தந்த உபி - டெல்லி பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டம்.. டெல்லி அணி அசத்தல் வெற்றி.!

மும்பை - பெங்களூர் அணிகள் இன்று மோதல்:

பெங்களூர் கிரிக்கெட் அணியில் (Royal Challengers Bangalore Women's WPL Squad) தானி ஹோட்ஜ், சபினேனி மேக்னா, ஸ்மித்ரி மந்தனா, சார்லி டீன், எலிஸ் பேரி, ஜியார்ஜ் கிரகம், கனிகா அனுஜா, ராகவி பிஸ்ட், நுசத் பிரவீன், ரிச்சா கோஷ், ஜக்ரவி பவார், ஜோசிதா, ரேனுகா சிங், சினேக ராணா, ஆஷா சோபனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அணியை (Royal Challengers Bangalore Women's Team Captain) கேப்டனாக ஸ்மித்ரி மந்தனா (Smriti Mandhana) கேப்டனாக வழிநடத்துகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் (Mumbai Indians Women's Squad) ஹேலி மேத்யூஸ், யஸ்திகா பாட்டியா, நடாலி ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்பிரீத் கவுர் (சி), அமெலியா கெர், சஜானா எஸ், அமன்ஜோட் கவுர், ஜிந்திமணி கலிதா, சான்ஸ்கிரித குப்தா, சைக்கா உய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பெங்களூர் அணி தான் எதிர்கொண்ட 2 போட்டியில் இரண்டிலும் வெற்றி அடைந்துள்ளது. மும்பை அணி தான் எதிர்கொண்ட இரண்டு போட்டியில், ஒன்றில் வெற்றி அடைந்துள்ளது. இதனால் இரண்டு அணிகளும் மூன்றாவது போட்டியை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இரண்டு அணியும் வெற்றிக்காக போராடும்.

பெண்கள் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியல் (Women's Premier League WPL 2025 Points Table Today):