ஜூலை 26, சென்னை (Chennai): மேற்குத்திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு சாதகமான வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தனது நாளைய வானிலை (Tomorrow Weather) அறிவிப்பில் தெரிவித்து இருந்தது. இன்று நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக உதகை மற்றும் குந்தா தாலுகாக்களில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. TN Weather Update: தமிழ்நாட்டில் வெளுக்கப்போகும் மழை.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 26, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)