அக்டோபர் 23, தொண்டாமுத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர், குப்பேபாளைம் பகுதியில், இன்று அதிகாலை நேரத்தில் காட்டு யானை ஒன்று உணவு தேடி வந்துள்ளது. இந்த ஒற்றை காட்டு யானை சாலையோரம் வயல் பகுதியில் இருந்த மின்கம்பத்தை முட்டியதாக தெரியவருகிறது. இதனால் மின்சார கம்பம் சாய்ந்த நிலையில், யானை மின்தாக்குதலுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இன்று அதிகாலை 5 மணியளவில் இதுதொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து மின்சாரத்தை துண்டித்து யானையின் உடலை மீட்டுள்ளனர். யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். Chennai News: அசந்து உறங்கிய தாய்.. மழைநீர் குட்டையில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை பலி.. மழைக்காலத்தில் பெற்றோர்களே கவனம்.! 

கோவையில் மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து யானை மரணம் (Elephant Died in Coimbatore):

25 வயதுடைய ஆண் யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)