ஜூலை 05, கூமாபட்டி (Virudhunagar News): ஏங்க கூமாபட்டிக்கு வாங்க என இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்த இளைஞர் தங்கபாண்டி, தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், "காவல்துறை / வனத்துறை அதிகாரி பொறுப்புக்கு சென்று பணியாற்ற வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால், எனது தம்பிக்கும், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் இடையே பிரச்சனை நடந்தது. இந்த பிரச்சனையில் எனது பெயரையும், தங்கையின் பெயரையும் சேர்த்து கொடுத்துவிட்டார்கள். இதனால் வந்த வழக்கு அரசு வேலைக்கு முடுக்குபோட்டுவிட்டது. ரூ.150 பணம் இல்லாததால் குற்றாலம் செல்லலாம் என அழைத்த நண்பர்கள் என்னை நடுத்தெருவில் இறக்கிவிட்டு சென்றனர். தற்கொலை செய்ய பிளவக்கல் அணைக்கு சென்றபோது, விவேகானந்தரின் வாசகம் ஒன்று பேப்பரில் இருந்தது. அதுவே இன்று எனது ஊரை பிரபலப்படுத்த காரணமாக இருந்தது" என கூறியுள்ளார்.

கூமாபட்டி தங்கபாண்டி பேசிய காணொளி (Koomapatti Thangapandi Interview):

Video Credit & Thanks : Arrowroots Tamil

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)