மே 10, சேலம் (Salem News): சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வட்டம், பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வரும் மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று 3G கரைசல் தயாரிப்பது எப்படி? மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி மக்களுக்கு செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். 3G கரைசல் செய்ய, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய மூன்றையும் துன்டு துன்டாக வெட்டி வைத்துகொள்ளவும்.இவையனைத்தையும் மாட்டு சிறுநீரோடு கலக்க வேண்டும் 10 முதல் 15 நாட்கள் வைத்த பிறகு எடுத்து பயன் படுத்தலாம். இதனை அடுப்பில் வைத்து காய்ச்சி பயன்படுத்தினால் இரண்டாவது நாளே பயன்படுத்தலாம். மேலும் 15 நாட்களுக்கு பிறகு அந்த கரைசலை வடிகட்டி பயன் படுத்த வேண்டும். 3ஜி கரைசலை 250 மி.லி. எடுத்து ஒரு டேங்கிற்கு அடிப்பது உகந்தது. பூவைத்துள்ள செடிகளுக்கு அடிக்க வேண்டாம். புழு (அ) பூச்சி தாக்கியிருந்தால் மட்டும் தெளிப்பது நல்லது என்று மக்களுக்கு மாணவர்கள் விளக்கம் அளித்தனர். TN SSLC Results 2024: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. திண்டுக்கல்லில் 499 மதிப்பெண் எடுத்து சாதித்த மாணவி..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)