மே 04, சீனா (Trending Video): சீனாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில், மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் பயிற்சிகள் அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்றன. தற்காப்புக் கலையான குங்புவில் தொடங்கி பல விளையாட்டுகளுக்கும் சிறந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில், சீனாவில் எங்கு எடுக்கப்பட்டது என்ற விபரமில்லாத வீடியோவில், குழந்தைகள் பலரும் கூடைப்பந்தை திறம்பட கையாளுகின்றனர். பார்ப்பதற்கு வார்த்தைகள் விவரிக்க இன்றி சிறார்களின் அசத்தல் செயல்பாடு குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. நம் ஊர் குழந்தைகளின் கைகளில் செல்போன்கள் விளையாட்டு சாதனங்களாக இருக்க, சீன குழந்தைகள் விளையாட்டில் உயர்திறன் பயிற்சி பெற்று வருகின்றனர் என நெட்டிசன்கள் தங்களின் கருத்தையும் முன்வைக்கின்றனர். Sulawesi Floods: இந்தோனேஷியாவில் கொட்டித்தீர்த்த கனமழை; கடும் வெள்ளத்தில் சிக்கிய சுலாவெசி தீவு.. 14 பேர் பலி.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)