மார்ச் 25, வாணியம்பாடி (Tirupathur News): திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி (Vaniyambadi) அருகேயுள்ள கொத்தகோட்டை பகுதியில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர், தேர்வு எழுத பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது, திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லும் அரசுப் பேருந்து வந்தது. பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்து நிற்காமல் சென்றதால் மாணவி அதிர்ச்சி அடைந்தார். இதனால் மாணவி அரசுப் பேருந்தை பின் தொடர்ந்து ஓடினார். பின்னர், அரசு பேருந்தில் ஏறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. Chains Snatch: ஒரு மணிநேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு.. சென்னையை அலறவிட்ட கும்பல்..!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)