CSG Vs DD Qualifier 2 1st Batting (Photo Credit: @TNPremierLeague X)

ஜூலை 04, திண்டுக்கல் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி தொடங்கியது. முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் சேலத்திலும், 3வது சுற்று லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியிலும் நடைபெற்று முடிந்தன. நடப்பு தொடரில், 28 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. இப்போட்டிகள், அனைத்தும் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. CSG Vs DD Qualifier 2, Toss: திண்டுக்கல் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. இறுதிபோட்டிக்கு செல்ல போவது யார்..?

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் திண்டுக்கல் டிராகன்ஸ் (Chepauk Super Gillies Vs Dindigul Dragons):

இந்நிலையில், முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்த சேப்பாக் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணியை 2வது தகுதி சுற்றுப்போட்டியில் இன்று (ஜூலை 04) எதிர்கொள்கிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் (CSG Vs DD) அணிகள் 2வது தகுதி சுற்றுப் போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில், வெற்றி பெறும் அணி இறுதிபோட்டியில் திருப்பூர் அணியை எதிர்கொள்ளும். இப்போட்டியில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

சேப்பாக் அபார பேட்டிங்:

அதன்படி, முதலில் களமிறங்கிய சேப்பாக் அணிக்கு ஆரம்பத்தில் கே ஆஷிக் 8 ரன்னிலும், மோகித் ஹரிஹரன் 4 ரன்னிலும் ரன் அவுட்டாகினர். இதனையடுத்து, கேப்டன் பாபா அபராஜித் - ஜெகதீசன் இணை சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் கடந்தனர். அபராஜித் 67 ரன்னிலும், ஜகதீசன் 81 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த விஜய் சங்கர் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இறுதியில், சேப்பாக் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் அடித்துள்ளது. திண்டுக்கல் அணி சார்பில் அதிகபட்சமாக சசிதரன் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

நேரலை விவரம்:

அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சி (TNPL Live Watching) மற்றும் ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம்.