CSG Vs ITT, Qualifier 1 (Photo Credit: Facebook)

ஜூன் 30, திண்டுக்கல் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நடப்பு தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் சேலத்திலும், 3வது சுற்று லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியிலும் நடைபெற்று முடிந்தன. தற்போது, 28 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. இப்போட்டிகள், திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. TNPL 2025 Play Off: டிஎன்பிஎல் 2025; பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்.. TNPL நேரலை விவரம் இதோ..!

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் (Chepauk Super Gillies Vs Idream Tiruppur Tamizhans):

இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் (CSG Vs ITT) அணிகள் முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் மோதுகின்றன. இப்போட்டி, நாளை (ஜூலை 01) இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோல்வியடையும் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் ஜூலை 04ஆம் தேதி நடைபெறும் 2வது தகுதி சுற்றுப்போட்டியில் மோதும். இவ்விரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், சேப்பாக் அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

நேரலை விவரம்:

அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சி (TNPL Live Watching) மற்றும் ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள்:

கே ஆஷிக், ஆர்எஸ் மோகித் ஹரிஹரன், என் ஜெகதீசன், விஜய் சங்கர், பாபா அபராஜித் (கேப்டன்), ஸ்வப்னில் சிங், எஸ் தினேஷ் ராஜ், அபிஷேக் தன்வார், லோகேஷ் ராஜ், ஜே பிரேம் குமார், எம் சிலம்பரசன், ஆஷிக் கிருஷ்ணா ஸ்ரீனிவாஸ், ஆர் ராஜன், அர்ஜுன் கான் சுன்பா ஸ்ரீனிவாஸ், ஆர் ராஜன், அர்ஜூன் கான் கிருஷ்ணா மூர்த்தி, ஆர். ராஜலிங்கம் ஜி, சச்சின் பி.

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி வீரர்கள்:

அமித் சாத்விக், துஷார் ரஹேஜா, ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் (கேப்டன்), பிரதோஷ் ரஞ்சன் பால், உத்திரசாமி சசிதேவ், டேரில் ஃபெராரியோ, முகமது அலி, எஸ் மோகன் பிரசாத், ஆர்.சிலம்பரசன், டி.நடராஜன், பிரபஞ்சனா, கே, பிரபன்னிபாலன், எசக்கிமுத்து ஏ. சி.வி.அச்யுத், வி.அனோவங்கர், பாலு சூர்யா, கே.ராஜ்குமார், எம்.மதிவண்ணன், எஸ்.ராதாகிருஷ்ணன்.