
ஜூன் 30, திண்டுக்கல் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நடப்பு தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் சேலத்திலும், 3வது சுற்று லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியிலும் நடைபெற்று முடிந்தன. தற்போது, 28 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. இப்போட்டிகள், திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. LKK Vs SS: டிஎன்பிஎல் 26வது மேட்ச்.. நாளை கோவை - சேலம் அணிகள் பலப்பரீட்சை..!
2025 டிஎன்பிஎல் பிளே ஆப்:
இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் (CSG Vs ITT) அணிகள் முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் மோதுகின்றன. இப்போட்டி, நாளை (ஜூலை 01) இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. 3 மற்றும் 4வது இடங்களை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழஸ் (DD Vs TGC) அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதுகின்றன. இப்போட்டி, நாளை மறுநாள் (ஜூலை 02) இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோல்வியடையும் அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் ஜூலை 04ஆம் தேதி நடைபெறும் 2வது தகுதி சுற்றுப்போட்டியில் மோதும்.
நேரலை விவரம்:
அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சி (TNPL Live Watching) மற்றும் ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம்.