செப்டம்பர் 16, சென்னை (Sports News): சென்னையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்தவகையில் வங்கதேச (IND Vs BAN Test Series 2024) அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் (Chepauk) மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில், போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் உள்ளிட்ட வீரர்களுக்கான 5 நாட்கள் கொண்ட பயிற்சி முகாமை பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக இந்திய அணி வீரர்கள் கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி சென்னைக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். MS Dhoni On IPL 2025: ஐபிஎல் 2025-யில் எம்எஸ் தோனி விளையாடுவாரா..? பிசிசிஐ கூறுவது என்ன..!
இதில், இன்று (செப்டம்பர் 16) காலை சேப்பாக்கம் மைதானத்தில் விராட் கோலி (Virat Kohli) தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது, அவர் அடித்த ஒரு சிக்ஸ் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த தற்காலிக சுவரை உடைத்து ஓட்டை போட்டு இருக்கிறது. தற்போது, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இதனை அவரது ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
தீவிர பயிற்சியில் ஈடுபட்ட விராட் கோலி:
Bro casually broke Chepauk’s wall 🥵 pic.twitter.com/ipRMxS2GGx
— 𝘿𝙞𝙡𝙞𝙥𝙑𝙆18 (@Vk18xCr7) September 15, 2024