AFG Vs BAN 1st ODI, Toss (Photo Credit: @cricketangon X)

அக்டோபர் 08, அபுதாபி (Sports News): ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இதில், நடந்து முடிந்த டி20 தொடரில், வங்கதேச அணி 3-0 என ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் - வங்கதேச (AFG Vs BAN) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, இன்று (அக்டோபர் 08) மாலை 5.30 மணிக்கு அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. Australia Women Vs Pakistan Women: ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட்.. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு.!

ஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் (Afghanistan Vs Bangladesh):

ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, மெஹிதி ஹசன் மிராஸ் தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 19 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், ஆப்கானிஸ்தான் அணி 8 போட்டிகளிலும், வங்கதேச அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான், நங்கேயாலியா கரோட், ஏ.எம்.கசன்ஃபர், பஷீர் அஹ்மத்.

வங்கதேச அணி வீரர்கள்:

தன்சித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, சைஃப் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ் (கேப்டன்), நூருல் ஹசன், ஜேக்கர் அலி, தவ்ஹித் ஹிரிடோய், தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், தன்வீர் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப்.