அக்டோபர் 08, கொழும்பு (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 (ICC Women's Cricket World Cup 2025) கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஸ்ரீலங்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் இந்த தொடர் 02 நவம்பர் 2025ல் நிறைவு பெறுகிறது. நேற்று நடைபெற்ற இங்கிலாந்து பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி - வங்கதேசம் பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி இடையேயான ஆட்டத்தில், இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் எதிர் ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் (Pakistan - Australia Women's Cricket Match):
அதனைத் தொடர்ந்து இன்று (அக்டோபர் 08) நடப்பு தொடரின் ஒன்பதாவது ஆட்டம் பாகிஸ்தான் பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (Pakistan Women's National Cricket Team Vs Australia Women's National Cricket Team) இடையே நடைபெறுகிறது. பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் போட்டி இலங்கை நாட்டில் உள்ள கொழும்பு, ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இன்று நண்பகல் 3 மணியளவில் போட்டி தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் போட்டியின் முதல் கட்டமாக டாஸ் நடைபெற்ற நிலையில், டாஸில் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
பாகிஸ்தான் Vs ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் : (ICC Women's Cricket World Cup 2025 Pakistan Vs Australia):
போட்டி அணிகள்: பாகிஸ்தான் W Vs ஆஸ்திரேலியா W (Pakistan Women's Vs Australia Women's Cricket)
நடைபெறும் இடம்: ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானம், கொழும்பு, இலங்கை
போட்டி முறை: 50 ஓவர்கள்
போட்டி தொடங்கும் நேரம்: நண்பகல் 03:00 மணி
நேரலை விபரம்: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports)
பாகிஸ்தான் பெண்கள் Vs ஆஸ்திரேலியா பெண்கள் அணி விபரம் (Pakistan Women Vs Australia Women Squad):
பாகிஸ்தான் பெண்கள் அணி விபரம் (Pakistan Women Squad):
முனீபா அலி, சதாப் ஷமாஸ், சித்ரா அமின், எய்மான் பாத்திமா, நடாலியா பெர்வைஸ், பாத்திமா சனா (C), சித்ரா நவாஸ் (WK), ரமீன் ஷமிம், டயானா பைக், நஷ்ரா சந்து, சாடியா இக்பால்.
ஆஸ்திரேலியா பெண்கள் அணி விபரம் (Australia Women Squad):
அலிசா ஹீலி (C), ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எலிஸ் பெர்ரி, பெத் மூனி, அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்லீ கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், ஜார்ஜியா வேர்ஹாம், அலானா கிங், கிம் கார்த், மேகன் ஸ்கட்.