அக்டோபர் 08, அபுதாபி (Sports News): ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இதில், நடந்து முடிந்த டி20 தொடரில், வங்கதேச அணி 3-0 என ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் - வங்கதேச (AFG Vs BAN) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, இன்று (அக்டோபர் 08) மாலை 5.30 மணிக்கு அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானத்தில் தொடங்கியது. AFG Vs BAN 1st ODI, Toss: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஓடிஐ.. வங்கதேச அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!
ஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் (Afghanistan Vs Bangladesh):
ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, மெஹிதி ஹசன் மிராஸ் தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 48.5 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் 60 ரன்கள், தவ்ஹித் ஹிரிடோய் 56 ரன்கள் அடித்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் ரஷீத் கான் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:
ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான், நங்கேயாலியா கரோட், ஏ.எம்.கசன்ஃபர், பஷீர் அஹ்மத்.
வங்கதேச அணி வீரர்கள்:
தன்சித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, சைஃப் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ் (கேப்டன்), நூருல் ஹசன், ஜேக்கர் அலி, தவ்ஹித் ஹிரிடோய், தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், தன்வீர் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப்.